GCP RAIN NEL DAMAGED 
மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகிய நெல்மணிகள் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்ததாக தகவல்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இரவு பெய்த மழையால் நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Srini Vasan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இரவு பெய்த மழையால் நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கருங்கரடு, புதுக்கரைபுதூர், மேவானி உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முழுவதும் மழையில் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பு செய்ய போதியளவு தார்பாய்கள் வழங்காததால் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததாகவும் குற்றம் சாட்டினர்.