TVL Sholavaram lake damaged 
மாவட்ட செய்திகள்

சோழவரம் ஏரியில் சுமார் 100 மீட்டருக்கு கரை உள்வாங்கி சேதம்

40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் நடந்திருப்பதாக குற்றம்

Web Team

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியில், சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கரை உள்வாங்கி சேதம் அடைந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்பாய் கொண்டு ஏரிக்கரை மூடப்பட்டுள்ள நிலையில், 40 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.