Chennai 
மாவட்ட செய்திகள்

டேங்கர் லாரிக்கு வெல்டிங் செய்த போது விபத்து... கேஸ் கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் வெல்டர் படுகாயம்

சென்னை மாதவரத்தில் டேங்கர் லாரிக்கு வெல்டிங் செய்த போது, கேஸ் கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், வெல்டர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Web Team

சென்னை மாதவரத்தில் டேங்கர் லாரிக்கு வெல்டிங் செய்த போது, கேஸ் கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், வெல்டர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாதவரம் கணபதி நகரில் வெங்கடேசன் என்பவரது வெல்டிங் பட்டறையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் விஸ்வகர்மா என்பவர் கடந்த 2 மாதங்களாக வெல்டராக பணிபுரிந்து வந்தார்.

வியாழக்கிழமை பழுதுநீக்க வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த போது, கேஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

அதில் ராஜ்கிஷோருக்கு வயிறு, முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.