குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அத்துமீறல் நடப்பது குறித்து விசாரிக்க சென்ற வட்டாட்சியரிடம் தகராறு செய்ததாக அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஞாலம் ஊராட்சியில் சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவிலான நிலம் மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பனை மரங்கள் உள்ளிட்டவற்றை அதிமுகவை சேர்ந்த சிலர் சேதப்படுத்தி நிலத்தை சமன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க சென்ற தன்னிடம், ஜெகதீஷ் என்பவர் தகராறு செய்ததுடன், சமூக ஊடகங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக தோவாளை வட்டாட்சியர் புகார் அளித்ததையடுத்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.