காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் ஊராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், அவற்றை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டமாக உலா வரும் நாய்கள், நடை பயிற்சி செய்பவர்கள், பாதசாரிகள், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கப் பாய்வதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.