Ennore power plant. 
மாவட்ட செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து, ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் விபத்து தொடர்பாக, ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Web Team

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் விபத்து தொடர்பாக, ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊரணமேடு கிராமத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து 2 யூனிட்களின் மூலம் தலா 600 மெகாவாட் வீதம் 1.320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அனல் மின் நிலையத்தில் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனல் மின் நிலையத்தின் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் இருந்த போது, சாரம் சரிந்து விழுந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் கீழே விழுந்ததுடன், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணியின் போது அலட்சியமாக இருந்ததாக ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.