14 
மாவட்ட செய்திகள்

ஏப்ரல், மே மாதங்கள்.. பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை

நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களிலும் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதித்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

Srini Vasan

நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களிலும் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதித்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

அப்பகுதியில் ஏராளமான பூங்காக்கள், அணைகள், புல்வெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காட்சி முனைகள் உள்ளதால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

குறிப்பாக, உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய பகுதிகளில் அதிகமாக பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும் கோடை காலங்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்படுகிறது.