SVG Doctors protest 
மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல்

பயிற்சி மருத்துவர்களுடன் இணைந்து முதுநிலை பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Team

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்களுடன் இணைந்து முதுநிலை பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 28ம் தேதி மருத்துவ பயனாளர் உடன் வந்த உறவினர்கள், பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டித்தும், ஒரு வாரம் கடந்தும்
தாக்கியவர்களை கைது செய்யாத காவல்துறைக்கு எதிராகவும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.