21 
மாவட்ட செய்திகள்

பகலில் ஆட்டோ ஓட்டுதல், இரவில் போதை பொருள் விற்பனை.. ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேரை கைது செய்த போலீஸார்

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் பகலில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இரவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 5 ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.

Srini Vasan

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் பகலில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இரவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 5 ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், கரையான்சாவடியில் இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்த நபர்களை மடக்கி சோதனை செய்தபோது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.