அரக்கோணம் அருகே தார் ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில், தார் இறக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக லாரி திடீரென தீப்பற்றியது. இதில், தார் உருக்கும் இயந்திரம், மிக்ஸிங் இயந்திரம் என அனைத்தும் தீப்பற்றி எரிந்தது.
பாளையக்காரர் கண்டிகையில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தார் ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில் லாரியிலிருந்து தார் இறக்கும்போது, தீப்பற்றியது.
இந்த விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக உரிமையாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.