சென்னை ரெட்டேரியிலிருந்து பெருங்களத்தூருக்கு அரசுப் பேருந்தில் சென்ற தனியார் கல்லூரி மாணவனை டிக்கெட் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தகாத வார்த்தைகளில் பேசி அடிக்க முயன்ற நடத்துனரின் வீடியோ வெளியாகியுள்ளது.
ரெட்டேரியில் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவன் QR SCANNER-ல் பணம் அனுப்ப முடியாததால் தனது தங்கை மூலமாக பணம் அனுப்பியதாக தெரிகிறது. இதை அறியாத நடத்துனர் QR SCANNER லிங்க்-ஐ CANCEL செய்ததால் மாணவனிடன் பணம் கேட்டுள்ளார். மாணவன் மறுக்கவே நடத்துனர் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க பாய்ந்தார்.