14 
மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கண்ட பொதுக்கூட்டத்தில் சலசலப்பு.. பா.சிதம்பரம் பேசுவதற்கு முன்பே பாதியில் சென்ற பெண்கள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் பேசுவதற்கு முன்பே, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், பாதியிலேயே எழுந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

Srini Vasan

கூட்டத்தில் இருந்து வெளியேறிய பெண்கள், தங்களை 4 மணிக்கு வரவழைத்ததாகவும், வந்ததற்கு 300 ரூபாய் தருவார்கள் என சைகை மூலம் வெளிப்படுத்தி சென்றனர்.