தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியில் குடும்பம், தொழில் தான் முக்கியம் என பேசிய புஸ்ஸி ஆனந்த், அடுத்த நொடியே மாநாட்டில் பங்கேற்க விடுமுறை அளிக்கவில்லை என்றால் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என தொண்டர் ஒருவர் கூறியதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் தவெக -வின் முதல் மாநாட்டிற்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கு வருபவன் தான் உண்மையான தொண்டன் என குட்டிக்கதை ஒன்றைக் கூறினார்.