NIL Cheeta 
மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து இரை தேடிய சிறுத்தையின் சிசிடிவி

இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த இரண்டு சிறுத்தைகள் வேட்டையாடுவதற்காக இரை தேடிக் கொண்டிருந்தது

Web Team

குன்னூரில் இரண்டு சிறுத்தைகள் வேட்டையாடுவதற்காக இரை தேடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிங்காரதோப் ராணுவ குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், சிறுத்தையை கண்காணிக்க சிசிடிவி கேமரா
வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த இரண்டு சிறுத்தைகள் வேட்டையாடுவதற்காக இரை தேடிக் கொண்டிருந்தது பதிவாகிய நிலையில், சிறுத்தையை பிடிக்கவும், முட்புதர்களை அகற்றவும் கோரிக்கை விடுத்தனர்.