கோவையில் யாசகம் கேட்பது போல நடித்து, தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை வடமாநில பெண்கள் திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
அத்திபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குள் யாசகம் கேட்பது போல ஏழு வடமாநில பெண்கள் உள்ளே நுழைந்தனர்.
அப்போது, இரண்டு பெண்கள் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த காப்பர் ஒயர் மற்றும் விலையுர்ந்த பித்தளை உலோகங்களை திருடிச்சென்றதாக நிறுவன உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார்.