Thirupur school issue 
மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் அவதி

குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்யாததால் புழுக்கள் மிதக்கும் நிலையில், கழிவறை எப்பொழுதும் பூட்டியே உள்ளது

Web Team

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் மாணிக்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்யாததால் புழுக்கள் மிதக்கும் நிலையில், கழிவறை எப்பொழுதும் பூட்டியே உள்ளதால், குழந்தைகள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்.