காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் விழா முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், மற்றும் இருங்காட்டுக்கோட்டை திமுக நிர்வாகி சுதாகர் ஆகியோரை திமுக ஒன்றிய செயலாளர் கோபால் தரகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது.