NGP Collector office 
மாவட்ட செய்திகள்

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என கூறி, 500க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

Web Team

குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட மீனவ மக்கள்,நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நம்பியார் நகரில் குடிநீர், சாலை மற்றும் பாதாள சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என கூறி, 500க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.