TNL Dog race 
மாவட்ட செய்திகள்

நாட்டு நாய்களுக்கான கண்காட்சி, ஓட்டப்பந்தயம்

போட்டியில் முதல் பரிசை வென்ற நாயின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Web Team

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நாட்டு நாய்களுக்கான ஓட்டப்பந்தயத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஓட்டி அணைக்கரை கிராமத்தில் நாட்டு நாய் கண்காட்சி மற்றும் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. முயல் பொம்மை இலக்காக இழுத்து செல்லப்பட்ட நிலையில் நாய்கள் சீறிப்பாய்ந்தன. போட்டியில் முதல் பரிசை வென்ற நாயின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.