அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏற்கனவே இருந்த பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என கட்சிப் பெயருடன், செங்கோட்டையன், மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என அச்சிடப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் செங்கோட்டையனின் உருவப்படங்கள் ஒருபுறமும், மறுபுறத்தில் விஜயின் உருவப்படத்துடன் பெயர்பலகை அமைக்கப்பட்டுள்ளது.