31 
மாவட்ட செய்திகள்

சென்னை பெண் காவல் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. ஆய்வாளர் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

சென்னையில் மாமியார் வீட்டு சாவியை வலுக்கட்டாயமாக பறித்து மருமகளிடம் கொடுத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறி பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. சென்னை, காமராஜபுரத்தைச் சேர்ந்த சகாய பிர்வீன் என்ற ஐ.டி நிறுவன அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

Srini Vasan

அதில், சகாய பிர்வீனை பிரிந்து வாழ்ந்து வரும் அவரது மனைவியின் உறவினரது தூண்டுதலின் பேரில் ஆய்வாளர் சுமதி மனித உரிமை மீறலில் ஈடுபட்டு சகாய பிர்வீனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவமானப்படுத்தியதும், வீட்டு சாவியை பிடுங்கி கொடுத்ததும் தெரியவந்தது.