சென்னை வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள துரித உணவகத்தில் உணவு வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். துரித உணவகத்தில் உணவு வாங்கும்போது சூரிய பிரகாஷ் என்பவனுக்கும், சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.