Chengalpattu 
மாவட்ட செய்திகள்

திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கு... தலைமறைவாக இருந்த கூலிப்படை தலைவன் அருண்ராஜ் கைது

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படை தலைவன் அருண் ராஜை போலீசார் கைது செய்தனர்.

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படை தலைவன் அருண் ராஜை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு நடந்த இந்த கொலையில், ஜாமீனில் வெளியே வந்த கூலிப்படையின் தலைவன் அருண்ராஜ் தலைமறைவானான்.

இந்நிலையில் வண்டலூர் ரயில் நிலையம் அருகே அருண்ராஜ், கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் அவனை மடக்கி பிடிக்க முயன்றனர்

அப்போது தப்பியோட முயன்ற அருண்ராஜ், கால் இடறி தண்டவாளத்தில் விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்ராஜுக்கு மாவு கட்டு போட்டப்பட்டது.