சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கில், உரிய விளக்கங்களுடன் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜராகும்படி தலைமை கால்நடை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொதுமக்களை நாய்கள் தாக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.