KRG God statue issue 
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு திராவிடர் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கடும் எதிர்ப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலை கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலை கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.

அரசுப்பள்ளியில் சரஸ்வதி சிலையை நிறுவ பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.

அதனடிப்படையில் சிலை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பள்ளி வளாகத்தில் கடவுளர் சிலை அமைக்க முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், இரவோடு இரவாக சிலையின் கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.