விழுப்புரம் அருகே உள்ள அய்யனாம்பாளையத்தில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமாயின. கெடார் பகுதியில் இருந்து விழுப்புரத்திற்கு முட்டை லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், அய்யனாம்பாளையம் அருகே எதிரே சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், முட்டைகள் உடைந்து சாலையில் ஓடின.