தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் புதுச்சேரியில் நாட்டுப்புற நடன போட்டி நடைபெற்றது.
தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் மாநில அளவில் நாட்டுப்புற நடன போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரிலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 8 மற்றும் 9 ம் வகுப்பு மாணவிகளின் வாழ்வியல் திறனை வளர்ப்பதற்காக போட்டி நடத்தப்பட்டது.
இதில் புதுச்சேரி,காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகள் குழுக்களாக தங்களது நடனத் திறனை வெளிப்படுத்தினர்.