New Project - 2025-05-13T154009 
மாவட்ட செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு புது அர்த்தம் சொன்ன முன்னாள் அமைச்சர்... இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு போர் நிறுத்தம்- வைகை செல்வன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு தான் இந்தியா பாகிஸ்தான் போரே முடிவுக்கு வந்ததாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் புது விதமான விளக்கம் அளித்துள்ளார்.

Srini Vasan

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு தான் இந்தியா பாகிஸ்தான் போரே முடிவுக்கு வந்ததாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் புது விதமான விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவெற்றியூர் தேரடி பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வைகை செல்வன், இபிஎஸ் பிறந்த நாள் என்பதை முன்கூட்டியே அறிந்த மத்திய அரசு போரை முடிவுக்கு கொண்டு வந்தது என போர் நிறுத்தத்திற்கு புது விதமான விளக்கத்தை கூறினார்.