புதுக்கோட்டை அருகே முன்னாள் விஏஓவையும், அவரது மகன்களையும் அதிமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் அடியாட்களை வைத்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
துறையூர் ஊராட்சி தலைவராக முருகேசன் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் விஏஓ காசி புகார் அளித்தார்.
இதுகுறித்த விசாரணைக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆஜரானபோது, தாக்கியதாக கூறப்படுகிறது.