VLR Salai mariyal 
மாவட்ட செய்திகள்

ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆத்திரம்

உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, காட்பாடி - குடியாத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Web Team

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரசமங்கலம் பகுதியில் உள்ள தாங்கல் ஏரி நிரம்பி, குளக்கரை பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளானதால் ஆத்திரமடைந்த மக்கள், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, காட்பாடி - குடியாத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.