சென்னை காந்தி மண்டபத்தில் வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தி பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, சென்னை காதி கிராமோத்யோக் பவன் நடத்திய மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றிய காந்தியவாதிகள் மற்றும் நாட்டின் தூய்மைக்காக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.