பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் அதில் வந்த தம்பதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரியவடகரை கிராமத்தை சேர்ந்த பாலாஜி - சித்ரா தம்பதி, வேப்பந்தட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
வெண்பாவூர் வனப்பகுதியில் சாலை வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கை.களத்தூர் போலீசார் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.