திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்போது பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுமலை குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட
பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.