13 
மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை: நெல் மூட்டைகளை பாதுகாக்க ஆட்சியர் உத்தரவு.. திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் 18,000 மெட்ரிக் டன் மூட்டைகள்.. குடோன், அரவை மில்லுக்கு நெல் மூட்டைகளை அனுப்பி வைத்திடுக.. செயல்படாத சர்க்கரை ஆலை வளாகத்திலும் தேக்கி வைத்திட உத்தரவு

கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கி கிடக்கும் 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Srini Vasan

கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,

தேங்கி கிடக்கும் 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள எடமணல், மாணிக்கபங்கு, எம்.ஆர்.எம். மில், சித்தர்காடு குடோன், எருக்கூர் மில் ஆகிய இடங்களுக்கு அரவைக்கு ரயில் மூலம் நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைக்க உத்தரவிட்ட ஆட்சியர்,

தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திலும்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையிலும் பாதுகாப்பாக வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.