குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் 2 வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கனமழையால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது.
இதையடுத்து 2 வது நாளாக குளிக்க தடை விதித்த மாவட்ட நிர்வாகம் வாரவிடுமுறையையொட்டி படகு சவாரிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.