மேட்டுப்பாளையம், கோவை 
மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை.. தொடர் மழையால் கல்லார் - அடர்லி அருகே மண் சரிவு

நீலகிரி மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

Srini Vasan

நீலகிரி மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இன்று மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்து வரும் மழையால் கல்லார் -அடர்லி இடையே தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டடு ஒரு நாள் மட்டும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்தது.

இதனால் மலை ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செய்து காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.