Indigo flight 
மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானம்... தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னைக்கு திரும்பியது

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

Web Team

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மேல் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

இயந்திர கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், விமானத்தில் பயணித்த 165 பேர் உயிர் தப்பினர்.

பின்னர் அவர்கள் மாற்று விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.