கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின் போது பள்ளி வளாகத்தை சூறையாடி தீ வைத்து எரித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டார்.