CHN Kilambakkam fight 
மாவட்ட செய்திகள்

பேருந்து நடத்துநரை அடித்த சட்டக் கல்லூரி மாணவி

நடத்துரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காலணியால் தாக்கியுள்ளார்.

Web Team

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் அருகே மாநகரப் பேருந்து நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி காலணியால் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரிமுனையில் இருந்து கிளாம்பாக்கம் வரை வந்த மாநகரப் பேருந்தில் பயணித்த சட்டக் கல்லூரி மாணவி ப்ரியா, தாம்பரத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டு அதற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் நடத்துநர் மேலும் 15ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க கூறியதால், ஆத்திரமடைந்த பெண், தாம்பரத்தில் இறக்கிவிடாமல் இதுவரை அழைத்து வந்தது உன்னுடைய தவறு என நடத்துரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காலணியால் தாக்கியுள்ளார்.