6 
மாவட்ட செய்திகள்

காரியாபட்டி கிருஷ்ணா நகரில் மதுக்கடை திறக்க தடை.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக் கடை திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக் கடை திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணா நகர் பகுதியில் திறக்க உள்ள இந்த மதுபானக் கடையை சுற்றி 10-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்கா, ஊரணி ஆகியவை அமைந்திருப்பதால், அதனை திறக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து பதிலளிக்க மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மதுவிலக்குத்துறை உதவி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.