PDY Mali 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரி கடற்கரையில் ‘மாவலி’ சுற்றுதல் விழா

கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றும்போது தீப்ப்பொறி பறந்ததும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Web Team

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ‘மாவலி’ சுற்றுதல் விழா நடைபெற்றது. பனம்பூவை சுட்டு அதை தூளாக்கி துணியில் கட்டி, பனை ஓலை காம்பை மூன்றாக பிளந்து நெருப்பு வைத்து மக்கள் அனைவரும் மாவலி சுற்றி மகிழ்ந்தனர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றும்போது தீப்ப்பொறி பறந்ததும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.