எம்.ஜி.ஆரே 30 வருடம் திமுகவில் இருந்ததால் அரசியலில் ஜொலித்ததாகவும், அதனால் எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் மட்டுமல்ல யார் தவெகவுக்கு போனாலும், விஜய் வெளியில் வராமல் எதுவும் ஆகப்போவதில்லை என்றார்.