காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் முருகன் கோவில் வளாகத்திற்குள் உள்ள உண்டியல்களை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முருகன் கோவிலில் வரும் ஜூலை மாதம் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவில் வளாகத்திற்குள் உள்ள சண்முகநாதன், திரிபுரசுந்தரி உப சன்னதிகளின் எதிரே இருந்த உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.