பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி விண்ணப்பித்ததாகவும், அப்போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சீமான் மனுவில் தெரிவித்திருந்தார்.