10 
மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டி..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியில் தேசிய அளவிலான மகளிர் கபடிப் போட்டி திங்கட்கிழமை தொடங்கியது.

Web Team

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியில் தேசிய அளவிலான மகளிர் கபடிப் போட்டி திங்கட்கிழமை தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 21 அணிகள் பங்கேற்க உள்ளன.

முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் கோப்பையும், முதல் பத்து இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.