நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 10க்கும் மேற்பட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்ததால், இரவு 10 மணி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால், பயணிகள் நடுவழியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அரசுப்பேருந்து மண்சரிவில் சிக்கியதில், பேருந்தில் இருந்த ஆறு பயணிகள் மற்றும் நடத்துநர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விடிய விடிய பெய்த கனமழை
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 2 ஆயிரத்து 152 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 69 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பர்லியாரில் 25 சென்டி மீட்டர் மழையும், கீழ்கோத்தகிரியில் 20 சென்டி மீட்டர் மழையும், எடப்பள்ளியில் 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.