ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மாதம் 6ஆயிரத்து 750 ரூபாய் அகவிலைப்படி வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது, கருப்பு முக்காடிட்டு ஒப்பாரி வைத்து அழுதபடி பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.