1 
மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஓ.பி.எஸ்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Web Team

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே சென்று வரவேற்றார்.

ஒரே நாளில் 2-வது முறையாக முதலமைச்சரை ஓ.பி.எஸ். சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சரை நலம் விசாரிக்க வந்ததாக கூறினார்.

எதிர்காலத்தில் திமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியலில் நிரந்நர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்றார். மேலும், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு, அரசியலில் தனக்கென ஒரு சுயமரியாதை இருப்பதாக பதில் அளித்தார்.