Sengottayan banner 
மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டியில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏ உண்ணாவிரதம்

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் செங்கோட்டையன் புகைப்படம் உள்ள பேனர் வைக்கப்பட்டிருந்தது.

Web Team

செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், மதுரை உசிலம்பட்டியில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் செங்கோட்டையன் புகைப்படம் உள்ள பேனர் வைக்கப்பட்டிருந்தது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும், எருமார்பட்டி, உத்தப்பநாயக்கனூர் ஆகிய இடங்களிலும் உள்ள மின்மாற்றிகளை மாற்றி அமைக்க கோரி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பேனர்களில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் செங்கோட்டையனின் உருவ படங்கள் இருந்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து இருந்த போது தயார் செய்யப்பட்ட பேனர் என அய்யப்பன் தெரிவித்தார்.