பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் சேவல், மயில் பொறிக்கப்பட்ட கொடி கோவிலை வலம் வந்து, கொடிமரம் முன் எழுந்தருளி பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திராளாக கலந்து கொண்டனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய விழாவாக முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் 10 ம் தேதியும், தைப்பூசத் திருவிழா தேரோட்டம் 11 ஆம் தேதி மாலையும் நடைபெற உள்ளது.
பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.